கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கீரைக்கார தெருவில் உள்ள சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் உடையார்பாளையம் ராஜ வீதியில் உள்ள பக்த ஆஞ்சநேயர், உடையார்பாளையம் கருட கம்ப தெருவில் உள்ள கருடகம்ப ஆஞ்சநேயர், உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story