இருக்கன்குடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


இருக்கன்குடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 14 Oct 2022 11:42 PM IST (Updated: 15 Oct 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

விருதுநகர்

சாத்தூர்

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடன்களாக சாத்தப்பட்ட பரிவட்ட பட்டு சேலைகள் மற்றும் பட்டு அங்க வஸ்திரங்கள் கோவில் கலையரங்கம் அருகில் வைத்து ஏலம் விடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவல் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

அப்போது சாத்தூர் மாரியம்மன் கோவில், பஸ் நிலையம் அருகில் பத்ரகாளியம்மன் கோவில், படந்தால் துர்க்கை அம்மன் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story