கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்


கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
x

கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கால பைரவருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story