அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கரூர்
புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதேபோல் திருக்காடுதுறை, சேமங்கி, நொய்யல், அத்திப்பாளையம், குந்தாணி பாளையம் நத்தமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story