சூரியனார்கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்


சூரியனார்கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
x

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி சூரியனார் கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி சூரியனார் கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

குருப்பெயர்ச்சி விழா

கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் உஷா தேவி சாயாதேவி உடனாய சிவசூரிய பெருமான் கோவில் உள்ளது. இங்கு சூரியன் மூலவராகவும் சூரியனைப் பார்த்தவாறு குருவும், ஏனைய கிரகங்கள் சூரியனைச் சுற்றி தனித்தனி சன்னதிகளில் அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று முன்தினம் பிரவேசம் செய்தார். இதையொட்டி குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி சூரியபெருமான் தங்க கவச அலங்காரத்திலும், உற்சவர் குரு பகவான் சிறப்பு மலர் அலங்காரத்திலும் அருள் பாலித்தனர்.

குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

குரு பகவானுக்கு மஞ்சள் திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், இளநீர் பன்னீர், தயிர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஹோமம் செய்யப்பட்ட கட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் குரு பகவான் காட்சியளித்தார். குருப்பெயர்ச்சி அடைந்த போது மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்புரான் சாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர். குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story