நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
x

புரட்டாசி மாத சதுர்தசி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் ஆலந்துறையார் சிவன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத சதுர்தசி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜ பெருமான், சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்கள் திருமுறைகள், சிவபுராணம், நடராஜ பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.


Next Story