சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
x

சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடராஜர் சன்னதி உள்ள சிவன் கோவில்களில் நேற்று ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதில் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. ஆனி உத்திரம் திருமஞ்சனத்தையொட்டி நேற்று மாலை ஆனந்த நடராஜர், சிவகாம சுந்தரி சுவாமிகளுக்கு செல்லப்பா தலைமையில் சிவாச்சாரியார்கள் அபிஷேகங்களை செய்தனர்.

இதில் பக்தர்கள் கொடுத்த விபூதி, சந்தனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சன்னதி முன்பு கூடியிருந்த திரளான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


Next Story