சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
ஆம்பூரை அடுத்த கைலாசகிரி ஊராட்சி பனங்காட்டூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த கைலாசகிரி ஊராட்சி பனங்காட்டூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் வில்வநாதன் (ஆம்பூர்), அமலுவிஜயன் (குடியாத்தம்), மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். மேலும் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும் ஊட்டச்சத்தும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்திசீனிவாசன், நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதிஸ்ரீ, டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story