சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அச்சங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியனை சேர்ந்த லாந்தை ஊராட்சிக்கு உட்பட்ட அச்சங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில், கொம்பூதி கால்நடை டாக்டர்கள் சித்தி மர்ஜிதா, சாரதா, கால்நடை ஆய்வாளர் ஜஹாங்கீர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் கலாவதி அடங்கிய மருத்துவ குழுவினர் சிறப்பு முகாமை நடத்தினர். கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாமும் நடைபெற்றது. முடிவில் லாந்தை ஊராட்சி துணைத்தலைவர் கனிப்பிரியா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story