ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.