திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு வங்கி மேளா


திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு வங்கி மேளா
x

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு வங்கி மேளா நாளை நடக்கிறது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் காக்கவாக்கம், சிறுவாடா, இலுப்பூர், பூங்குளம், கிருஷ்ணமராஜகுப்பம், கொலப்பஞ்சேரி, கச்சூர், விளாங்காடுபாக்கம், சின்னநாகப்பூடி, பெரியமுல்லைவாயல், பெரியகடம்பூர், திருவாலங்காடு, விளாப்பாக்கம் மற்றும் அரக்கம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 10 மணி அளவில் சிறப்பு வங்கி மேளா நடத்தப்பட உள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு வங்கி மேளாவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு புதிய வங்கி கணக்கு தொடங்கவும், இன்சூரன்ஸ் பதியவும், கல்வி கடன், பயிர் கடன், கிசான் கிரெடிட் கார்டு கடன், சுய தொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், கால்நடை பராமரிப்பு கடன், வேளாண் எந்திரங்கள் கொள்முதல் கடன், வேளாண் உட்கட்டமைப்பு நிதி கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன், தாட்கோ கடன், கூட்டுறவு வங்கி கடன் மற்றும் இதர வங்கி கடன்கள் பெறுவதற்கும், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குரு விவசாயி சான்று மற்றும் பட்டா மாறுதல் பெறுவதற்கும் தேவையான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் கிராம பொறுப்பு அலுவலர் மற்றும் வங்கி பொறுப்பாளரிடம் சமர்ப்பித்து கடன் உதவி உடனடியாக பெற்று பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story