திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள்


திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள்
x

ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருப்பூர்

திருப்பூர்

ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு பஸ்கள்

ஆயுதபூைஜ நாளை (திங்கட்கிழமை) கொண்ாடப்பட உள்ளது. மேலும் தொடர்விடுமுறை விப்பட்டுள்ளால் திருப்பூரில் வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதில் திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து சிவகாசி, மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 75 சிறப்பு பஸ்களும், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்களும் செல்கிறது.

திருவண்ணாமலை

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 30 பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப இரவில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story