இருக்கன்குடிக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்


இருக்கன்குடிக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

விருதுநகர்

சிவகாசி

ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்

தென் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் இருக்கன்குடி மாரி யம்மன் கோவில் புகழ்பெற்றது. இந்த கோவிலுக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளி என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில்நிர்வாகம் செய்து வருகிறது.

சிறப்பு பஸ்கள்

இந்த நிலையில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து வழக்கமாக தினமும் ஒரு பஸ் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) கூடுதலாக 6 பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் விருதுநகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


Related Tags :
Next Story