நவகைலாய கோவில்களுக்குசிறப்பு பஸ்கள் இயக்கம்


நவகைலாய கோவில்களுக்குசிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை புதியபஸ்நிலையத்தில் இருந்து நவகைலாய கோவில்களுக்குசிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் கூடுதலாக பயணிகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நவ கைலாய கோவில்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நேற்று கூடுதலாக 2 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, புன்னக்காயல் ஆகிய 9 கோவில்களுக்கு பஸ்களில் பக்தர்களை அழைத்து சென்று, மீண்டும் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இரவு கொண்டு வந்து விட்டனர். தொடர்ந்து வருகிற 1-ந்தேதி மற்றும் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படஉள்ளது.


Related Tags :
Next Story