சேலம் மாநகரில் சிறப்பு முகாம்:காணாமல் போன 16 பேர் கண்டுபிடிப்பு
சேலம் மாநகரில் சிறப்பு முகாம்:காணாமல் போன 16 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்
சேலம்
அன்னதானப்பட்டி
சேலம் மாநகரில் காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் வகையில் சிறப்பு முகாம் மாநகர போலீஸ் சமுதாய கூடத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 170 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடல்கள் என மொத்தம் 202 பேரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. அப்போது, காணாமல் போனவர்கள் யாரேனும் இறந்துள்ளனரா? என அவர்களின் உறவினர்கள் அடையாளம் பார்த்தனர். இந்த முகாமில் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் காணாமல் போன 16 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story