தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்


தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்
x

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடந்தது. கம்பைநல்லூர் அரசு பள்ளியில் கலெக்டர் சாந்தி முகாமை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

தர்மபுரி

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடந்தது. கம்பைநல்லூர் அரசு பள்ளியில் கலெக்டர் சாந்தி முகாமை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

குடற்புழு நீக்க முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. கம்பைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், துணை தலைவர் மதியழகன், மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சந்தோஷ்குமார், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விடுபட்ட குழந்தைகளுக்கு...

பின்னர் கலெக்டர் பேசுகையில், தா்மபுரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலம் 5.15 லட்சம் குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1.22 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகின்றது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 16-ந் தேதி நடைபெறும். அன்றைய தினத்தில் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் தவறாமல் வழங்கப்படும் என்று பேசினார்.


Next Story