ஆதார் திருத்த சிறப்பு முகாம்


ஆதார் திருத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சல் அலுவலகம் இணைந்து கல்லூரி வளாகத்தில் ஆதார் திருத்த சிறப்பு முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில், ஏரல் துணை கிளை அஞ்சல் அதிகாரி அமலா ரெனின்சியா, திருச்செந்தூர் வணிக மேம்பாட்டு அலுவலர் முகமது சமீம், கணினி நிர்வாகி சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் போன்ற மாற்றங்களை செய்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெற்றனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story