மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
x

காட்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

வேலூர்

வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு சிறப்பு முகாம் காட்பாடி ஒர்த் டிரஸ்ட்டில் நடந்தது. முகாமிற்கு வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கி படிவங்களை வழங்கினார். காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் வரவேற்றார். காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய வடிவங்களை வாங்கி சென்றனர்.

முகாமில் தேர்தல் துணை தாசில்தார் ஜெயந்தி, வருவாய் ஆய்வாளர் சதீஷ், காட்பாடி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story