மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 9 Feb 2023 7:30 PM GMT (Updated: 9 Feb 2023 7:30 PM GMT)
சேலம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு நடத்தினார்.

சிறப்பு முகாம்

சேலம் உடையாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது நடைபெற்ற இந்த முகாமில் 520 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்டர்கள் மூலம் மாற்றுத்திறன் சதவீதம் குறித்து அளவீடு மேற்கொள்ளப்பட்டு உடனடியாக மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதன்படி 15 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.

கெங்கவல்லியில் முகாம்

15 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 பெறுவதற்கான உத்தரவு ஆணைகள் 2 கால்களை இழந்த 8 வயதுடைய ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரத்தில் சக்கர நாற்காலி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரத்தில் கால் தாங்கி வழங்கப்பட்டு உள்ளன.

இந்த முகாம் மாவட்டம் முழுவதும் பல்வேறு நாட்களில் நடத்தப்பட உள்ளன. அதன்டி கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எனவே முகாமில அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story