மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்


மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
x

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அவர்களது காப்பாளர்களுடன் கலந்து கொண்டனர்.

விண்ணப்பதாரர்களை காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்யும் இடத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த முகாமில் கலந்து கொண்ட பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.

எனவே வரும் காலங்களில் நடைபெறும் முகாமிற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story