வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்


வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் ஏதேனும் ஒரு உறுப்பினரின் ஆதார் எண் வங்கி கணக்கில் இணைக்கப்படாத குடும்ப அட்டைகள் வங்கிக்கணக்கில் இணைத்திட மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் மூலம் அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இம்முகாமில் ஆதார் எண் வங்கிக்கணக்கில் இணைக்கப்படாத குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கூட்டுறவுத்துறையால் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட ரேஷன் கடையின் முன்பு அறிவிப்பு பலகையில் ஒட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள், ரேஷன் கடையில் ஒட்டப்பட்டுள்ள விவரங்களில் தங்களது குடும்ப அட்டையின் விவரம் இடம்பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியை அணுகி ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.


Next Story