மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
சிறப்பு முகாம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் தினாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார்.
முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய பராமரிப்பாளர்களுடன் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் நேரடியாக விண்ணப்பித்தனர்.
பரிசோதனை
தொடர்ந்து முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை பெற பரிந்துரை செய்தனர்.
வழக்கமாக காலை 10 மணியளவில் தொடங்க வேண்டிய முகாமிற்கு சுமார் 11.30 மணி வரை மருத்துவர்கள் வராததால் மாற்றுத் திறனாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பின்னர் வந்த மருத்துவர்களிடம் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில்200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமிற்கு மருத்துவர்கள் காலத்தாமதமின்றி வர துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.






