மலைவாழ் கிராமங்களில் ஆதார் கார்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் -கிராம மக்கள் வலியுறுத்தல்


மலைவாழ் கிராமங்களில்  ஆதார் கார்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் -கிராம மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் கிராமங்களில் ஆதார் கார்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் -கிராம மக்கள் வலியுறுத்தல்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை தாலுகா பகுதியில் வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப் பகுதிகளில் 12 மலைவாழ் கிராமங்கள் உள்ளது. இந்த மலைவாழ் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 340 பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில் சங்கரன்குடி, உடுமன்பாறை, நெடுங்குன்று, வெள்ளி முடி, கருமுட்டி, பரமன்கடவு, கவர்க்கல் ஆகிய மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் அவர்களின் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ரவி, ரத்தினசாமி ஆகியோர் தலைமையில் நேற்று வால்பாறை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் கிராம மக்களுக்காக சிறப்பு முகாம் நடத்தி ஆதார் அட்டையை புதுப்பிக்கும் பணியை செய்து கொடுக்க வேண்டும். ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிக்காக வனப்பகுதிக்குள் நடந்து வந்து அங்கிருந்து பஸ் பிடித்து வால்பாறை தாலுகா அலுவலகத்திற்கு வருவதால் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே எங்களது மலைவாழ் கிராம பகுதிக்கு வந்து இணையதள சேவை கிடைக்கும் இடத்தில் சிறப்பு முகாம் நடத்தினால் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணியை செய்து கொள்வார்கள். எனவே வருவாய் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது சிரமத்தை கருத்தில் கொண்டு எங்களுக்கு ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணியை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story