திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்வி கடன் பெற சிறப்பு முகாம்


திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்வி கடன் பெற சிறப்பு முகாம்
x

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்வி கடன் பெற சிறப்பு முகாம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாணவர்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக் கடன் பெறும் வாய்ப்புகளை எளிதாக்குவதற்கும் மாவட்ட அளவில் சிறப்பு கல்விக்கடன் முகாம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு கடனுதவி அளிக்கப்படுகிறது. இம்முகாமில் 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்க உள்ளன. இங்கு கல்விக் கடன் தொடர்பான வங்கிகளின் சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது.

மேலும் வருவாய்த்துறை மற்றும் இ-சேவை மையம் மூலம் கடன் நடைமுறைக்குத் தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு வசதிகள் முகாமில் செய்யப்பட உள்ளது. கல்விக்கடன் தொடர்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் ஆவடி மாநகராட்சி அலுவலகங்களில் மாவட்ட நிர்வாகத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்முகாம் மற்றும் கல்விக்கடன் தொடர்பான சந்தேகங்களுக்கு 9445346311, 9445346411 என்று உதவி எண்களை அழைக்கலாம். இந்த கல்விக் கடன் சிறப்பு முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story