விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் ராம்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விருத்தாசலம் தனபதி, திட்டக்குடி ரவிச்சந்திரன், வேப்பூர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, வங்கி கடன் மானியம், இலவச பஸ் பாஸ், உதவி உபகரணங்கள், இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் வேலைவாய்ப்பு உள்பட மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் வேண்டி கோட்டாட்சியர் ராம்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story