தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கான சிறப்பு முகாம்
தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கான சிறப்பு முகாம் 27-ந் தேதி நடக்கிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் சார்பில் வைப்புநிதி உங்கள் அருகில் எனும் சிறப்பு முகாம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. வேலூர் ஓட்டேரியில் உள்ள பிரியா மஹாலிலும், திருவண்ணாமலையில் வேங்கிக்காலில் ஓட்டல் சீசன்சிலும், ராணிப்பேட்டையில் எஸ்.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருப்பத்தூரில் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியிலும் இந்த முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குதல், தொழிலாளர்களின் ஆன்லைன் சேவைகளை விளக்குதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், பல்வேறு வகையான ஓய்வூதியங்கள், ஓய்வூதிய பலன்களுக்கான தகுதி போன்றவை குறித்து தெரிவிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/17HTvJHANPZHbiku1YevgUu vZYkhev3n2ceEp-n6PE/edit என்ற இணையமுகவரியில் சென்று பதிவு செய்யலாம்.