286 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்
கோவில்பட்டி தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கோவில்பட்டி நகரசபை பகுதியில் 72 வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடந்தது. முகாமில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் சுசிலா, தேர்தல் துணை தாசில்தார் சங்கரநாராயணன் ஆகியோர் பாரதி மேட்டுதெரு நகரசபை நடுநிலை பள்ளி, பசுவந்தனை ரோடு நாடார் மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடிகளை பார்வையிட்டனர். வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 26, 27 தேதிகளிலும் நடைபெறும் என உதவி கலெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story