அஞ்சல் காப்பீடு குறித்த சிறப்பு முகாம்


அஞ்சல் காப்பீடு குறித்த சிறப்பு முகாம்
x

வேலூர் கோட்டத்தில் அஞ்சல் காப்பீடு குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

வேலூர்

இந்திய அஞ்சல் துறை சார்பில் வேலூர் கோட்டம், தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அஞ்சலக கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். முதுநிலை அஞ்சல் அதிகாரி முரளி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை நகர அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன், உதவி இயக்குனர் ஜி.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஞ்சல் கோட்டம் முழுவதும் புதிதாக 1,020 பாலிசிதாரர்கள் இணைந்துள்ளதாகவும், இதன்மூலம் சந்தா தொகையைாக ரூ.61 லட்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முகாமில் அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story