விவசாயிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து சிறப்பு முகாம்


விவசாயிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து சிறப்பு முகாம்
x

விவசாயிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. நெமிலி தாசில்தார் பாலசந்தர் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி, சமூக பாதுகாப்பு தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் விவசாயிகள் தங்கள் நில விவரங்களை வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பதிவேற்றம் செய்வதால் அரசின் 13 துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற இது பயன்படுகிறது என்று எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி பேசுகையில், 'விவசாயிகள் அனைவரும் தங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி தங்களது ஆதார் எண், புகைப்படம், நில உரிமை ஆகியவற்றை வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என்றார்.

இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் பன்னீர்செல்வம், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story