வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
x

புதுக்கோட்டையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது.

புதுக்கோட்டை

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்து கொடுத்தபின் அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலியில் தங்களுக்கு உரிய பாகங்களில் உடனுக்குடன் வாக்காளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தனர். விராலிமலையில் நடைபெற்ற முகாம்களை விராலிமலை தாசில்தார் சதீஷ் ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் விவரங்களை குறைவாக பதிவேற்றம் செய்துள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

இலுப்பூர் தாலுகா

இலுப்பூர் தாலுகாவில் நடைபெற்ற முகாம்களில் 8,279 பேர் ஆர்வமுடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொண்டனர். மேலும் இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, கோவிந்தநாயக்கன்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வருவாய் துறையினர் உடனிருந்தனர்.


Next Story