வங்கி கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள்
கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் வங்கி கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள் நடந்தது.
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் உள்ள இந்தியன் வங்கி சார்பில், சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கும் வகையில் அவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரில் சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வேடநத்தம், சிறுநாத்தூர், கார்ணாம்பூண்டி ஆகிய கிராமங்களில் நடந்த முகாம்களில் 'ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்' என்ற அடிப்படையில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து புதிய சேமிப்பு கணக்குகள் தொடங்கினர்.
இப்பணியில் வங்கி ஊழியர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story