கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள்; 3, 4-ந் தேதிகளில் நடக்கின்றன


கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள்; 3, 4-ந் தேதிகளில் நடக்கின்றன
x

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 3, 4-ந் தேதிகளில் நடக்கின்றன.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள், முதற்கட்டமாக கடந்த 24-ந்தேதி முதல் அரியலூர் தாலுகாவில் 163 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும், செந்துறை தாலுகாவில் 74 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் குடும்ப அட்டைகள் எண்ணிக்கை அடிப்படையில் நேற்று வரை அரியலூர் தாலுகாவில் 72 முகாம்களும், செந்துறை தாலுகாவில் 32 முகாம்களும் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 133 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து முகாம்கள் நடைபெற்று நிறைவடையும். மேற்கண்ட முகாம்களில் விடுபட்ட விண்ணப்பதார்களுக்கு வருகிற ஆகஸ்டு 3, 4-ந் தேதிகளில் அந்தந்த மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்படாத குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் மற்றம் டோக்கன்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் முன்கூட்டியே வழங்கப்படும். மேலும் இந்த 2 நாட்களில், விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்வேறு காரணங்களால் முகாமில் வந்து பதிவு செய்ய தவறிய விண்ணப்பதார்கள், ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம்கள் வாய்ப்பினை பயன்படுத்தி விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை, ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story