சிறப்பு கால்நடை முகாம்
சிறப்பு கால்நடை முகாம் நடந்தது.
கரூர் மாவட்டம் மூர்த்திபாளையத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கரூர் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் டாக்டர் சரவண குமார் தலைமை தாங்கினாா். நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் லில்லி அருள் குமாரி முன்னிலை வகித்தார். பண்டுதகாரன் புதூர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தினேஷ் அசோலா தீவனத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இதில் கால்நடை மருத்துவா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ெகாண்ட குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்த விளங்கும் விவசாயிகளுக்கு மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டன. இதில் தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ரூபா, துணைத் தலைவர் சதீஷ் உள்பட பலா் கலந்து ெகாண்டனர்.