நெசவாளர் குறையை தீர்க்க சிறப்பு மையம்


நெசவாளர் குறையை தீர்க்க சிறப்பு மையம்
x

கைத்தறி நெசவாளர் குறையை தீர்க்க சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-

கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்களின் குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும் கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நெசவாளர்கள் தங்கள் குறைகளை https://gdp.tn.gov.in/dhl என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது wgrcchennai@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது குறை தீர்க்கும் அலுவலர் கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை - 104 என்ற முகவரிக்கு நேரில் அணுகியும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story