வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் சிறப்பு மிளகாய் யாகம்

வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில்  சிறப்பு மிளகாய் யாகம்
x

வரகூர் பிடாரி அம்மன் கோவிலில் நடந்த மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வரகூர் பிடாரி அம்மன் கோவிலில் நடந்த மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் பிரசித்தி பெற்ற பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் இரவு முழுவதும் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் மிளகாய் யாகம் வளர்க்கப்பட்டது. இதனையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக மிளகாயை அக்னி குண்டத்தில் போட்டு வழிபட்டனர்.மேலும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story