பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு திருப்பலி
தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் நடந்தது. இதில் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏசு பிறந்ததை குறிக்கும் வகையில் 12 மணிக்கு பேராலய அதிபர் சாம்சன் குழந்தை இயேசு சொரூபத்தை உயர்த்தி காண்பித்தார்.
திரளான கிறிஸ்தவர்கள்
பின்னர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசு சொரூபத்தை வைத்து புனிதம் செய்தார். இந்த திருப்பலியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகள் பேராலய நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்திருந்தனர்.