பிளஸ்-2 மாணவர்களுக்கு 4 இடங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்
பிளஸ்-2 மாணவர்களுக்கு 4 இடங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் வருகிற ஜூன் 19-ந் தேதி நடைபெறும் துணைத்தேர்வு எழுத மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு பயிற்சி இன்று முதல் வழங்கப்படுகிறது. அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி பகுதி மாணவ-மாணவிகள் அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியிலும், விருதுநகர், சாத்தூர் பகுதி மாணவ-மாணவிகள் விருதுநகர் ஹாஜிபி செய்யது முகமதுமேல்நிலைப்பள்ளியிலும், சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு பகுதி மாணவ-மாணவிகள் சிவகாசி ஏ.வி.டி. நகரசபை மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி மாணவ,மாணவிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க. நகரசபை மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story