திருமக்கோட்டை ராஜவிநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
திருமக்கோட்டை ராஜவிநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
திருவாரூர்
திருமக்கோட்டை தெற்கு தெருவில் ராஜவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி ராஜவிநாயகருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஞானசக்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story