கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம்


கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ-மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தினை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு தற்போதைய புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், சாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட பள்ளியில் பயன்று வருவதற்கான சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

நடவடிக்கை

இம்முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து மாணவர்களுக்கு உடனடி கடன் ஆணைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்ககொண்டு, இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story