சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கரூர்
தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பாக வட்டார அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் மேற்பார்வையில் நடைபெற்ற முகாமிற்கு ஒன்றிய ஆணையர் ராணி தலைமை தாங்கினார். முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வேலை வாய்ப்பு கலந்தாய்வில் கடவூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து 384 இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்களது சான்றுகளை காண்பித்து கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வில் பங்கேற்ற 47 பேருக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சிக்கு தேர்வு செய்தனர். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story