மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Jun 2022 8:25 AM GMT (Updated: 26 Jun 2022 8:29 AM GMT)

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சீபுரம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் 11 தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வை நடத்தினர். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து வேலை நாடுநர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story