தஞ்சையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்


தஞ்சையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்
x

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது

திருச்சி

திருச்சி, ஜூன்.1-

தஞ்சை-திருச்சி இடையேயான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மீண்டும் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி தஞ்சை - திருச்சி சிறப்பு ரெயில் (வண்டி எண். 06869) தஞ்சையில் இருந்து காலை 6.45 மணிக்குப் புறப்பட்டு 8.15 மணிக்கு திருச்சியை வந்தடையும். இந்த ரெயில் ஆலக்குடி, பூதலூர், அய்னாபுரம், சோளகம்பட்டி, தொண்டமான்பட்டி, திருவெறும்பூர் மஞ்சத்திடல் மற்றும் பொன்மலை ஆகிய இடங்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.


Next Story