நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு கட்டண ரெயில்


நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு கட்டண ரெயில்
x

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.

மதுரை


தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06041) தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் நள்ளிரவு 2.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்திற்கும், காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.06042) வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் 28-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படுகிறது. இரவு 9 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை மற்றும் வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில், ஒரு 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.


Related Tags :
Next Story