சிறப்பு கிராம சபை கூட்டம்
பெரும்புலிபாக்கத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி கலந்துகொண்டு பேசினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது சையுப்தீன், வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி பிச்சாண்டி, உதவி பொறியாளர் ஏகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் வேகாமங்கலத்தில் தலைவர் ஜெயமணி, அவளூரில் தலைவர் பார்வதி ராஜாமணி, அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் மோகனசுந்தரம், ஒச்சேரியில் தலைவர் சங்கீதா ஜெயகாந்தன், ஆயர்பாடயில் தலைவர் ஆனந்தி கோவிந்தன் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.
இதேபோல் சிறுவளையம் ஊராட்சியில் தலைவர் ருக்மணி தயாளன், உத்திரம்பட்டு ஊராட்சியில் தலைவர் மனோகரன், மாமண்டூரில் தலைவர் சுலோச்சனா பிரகாஷ், ஆலப்பாக்கத்தில் தலைவர் மரியாபிரகாசி கிருஷ்ணன், மாகாணிபட்டு ஊராட்சியில் பிரமீளா ரவி, பாணாவரத்தில் ஊராட்சி தலைவர் அர்ஜுனன், கூத்தம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் தயாவதி ராஜாராம், துறைபெரும்பாக்கத்தில் தலைவர் செல்லக்கிளி மூர்த்தி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
புதுப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுந்தரம், கர்ணாவூரில் தலைவர் செல்வி ஜீவா, பெருவளையம் ஊராட்சியில் தலைவர் சி.எஸ்.கே.குமரேசன், புதூரில் தலைவர் லோகநாயகி விநாயகம், களத்தூரில் தலைவர் சாந்தி சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளின் தேவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.