சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x

சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

கரூர்

தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பள்ளப்பட்டி நகராட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமை தாங்கினார். பள்ளப்பட்டி நகர்மன்ற தலைவர் முனைவர்ஜான் முன்னிலை வகித்தார். முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அடையாள அட்டையும் உதவித்ெதாகை மற்றும் காதுகேளாதவர்களுக்கு இலவச கருவிகளும் வழங்கப்பட்டது.

பின்னர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன. இதில், பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் குமரன், அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story