வால்பாறையில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
வால்பாறையில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஜோதிபாசு தலைமையில் தமிழக முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். அதில் 3 பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வனத்துறை மூலமாக நிவாரண உதவி தொகை பெறுவதற்கான சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது.
பிற மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வால்பாறை தாசில்தார் ஜோதிபாசு கூறுகையில், இந்த சிறப்பு முகாம் வருகிற 24 -ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குறைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story