சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்


சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன்பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் வருகிற 4-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையான உதவிகள் பெற தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது‌.



Next Story