முன்னாள் படை வீரர்களுக்கானசிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்5-ந்தேதி நடக்கிறது


முன்னாள் படை வீரர்களுக்கானசிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்5-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 10:19 AM GMT)

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.

கடலூர்


கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர் தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 5.1.2023 காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார்.

இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களை சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையை மனுவாக இரு பிரதிகளில் எழுதி அடையாள அட்டை நகலுடன் கலந்துக்கொள்ள வேண்டும், மேலும் தகவலுக்கு உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் நலன் அலுவலக தொலைபேசி எண் 04142 - 220732 -ல் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story