முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்


முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கரூர்

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 65 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 18 மனுக்கள் பெறப்பட்டு மேல்நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து படைவீரர் கொடிநாள் 2019-ம் ஆண்டு நிதி வசூலில் ரூ.5 லட்சத்திற்குள் வசூல் புரிந்த டி.என்.பி.எல். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், கரூர் உதவி திட்ட அலுவலர் சுவாமிநாதன் ஆகிய 2 அலுவலர்களுக்கு, தமிழக அரசின் தலைமை செயலாளரின் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து 3 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரத்திற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.


Next Story