மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x

மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.. நிகழ்ச்சிக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா முன்னிலை வகித்தார். முகாமில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மாத உதவித் தொகை, வங்கிக்கடன், உதவி உபகரணங்கள் ஆகியவை கேட்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இதில் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு 5 பேருக்கு ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.மீதமுள்ள மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.முகாமில் தனி தாசில்தார்கள் மன்னார்குடி குணசீலி, நீடாமங்கலம் ராஜ்கணேஷ், கூத்தாநல்லூர் மலைமகள், திருத்துறைப்பூண்டி சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story